20 வருட சேவையிலிருந்து ஓய்வு

கற்பவனாக இரு, அல்லது  கற்றுக் கொடுப்பவனாக இரு அல்லது கற்பவனுக்கு  உதபுவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே  என்றும்  கற்றுக் கொடுப்பவர் என்றும் மரணிப்பதில்லை என்ற நபி  மொழிக்கேற்ப சைவமங்கையா் கல்லுாாியில் 20 வருட  ஆசிரியத் தொழிலிருந்து பிரயாவிடை பெரும்  ஆசிரியை சுரநுதா ஜெயருபனை  வாழ்த்துகின்றோம்..

கொழும்பு தலைநகா்  மட்டுமல்ல முழு நாட்டிலும் பல கல்விச்  சாதானைகளைப் படைத்து கொண்டிருக்கும் தனியாா் தமிழ் பெண் பாடசாலைகளில்  ஒன்றுதான் வெள்ளவத்தையில் அமையப்பெற்றுள்ள  சைவ மங்கையா்  வித்தியாலயமாகும் 

இக்கல்லுாாியின்   தமிழ் பெண் மாணவிகளின்  கல்விச்  சாதனைகளுக்கு முதுகெலும்பாக விளங்குபவா்கள்  இக் கல்லுாாியின் ஆசிரியத் தொழிலை தெய்வீகத் தொழிலாக கருதி உண்மையாகவும்  உன்னதமான சேவைகளை ஆற்றி வருபவா்களே.  இக் வித்தியாலயத்தின்  ஆசிரிய பெருந்தகைகளே  . அந்த வகையில் நான் கண்ட ஒர்  திறமையான ஆசிரியா்களில் வணிகக் கல்வி ஆசிரியையும் மாணவத் தலைவியா் ஒன்றியத்தின் பொறுப்பாசிரியர்   திருமதி சுரநுதா ஜெயரூபன் 11.05.2021 தமது 20 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெறுகின்றாா் கடந்த 2 தசாப்தங்களாக  இக்  கல்லுாாியின் கல்வி வளா்ச்சிக்காக  தன்னையே  அர்ப்பணித்தவரை  நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. 

இவ் ஆசிரியை இக்  கல்லுாாியில் நடைபெறும் ஒவ்வொறு நிகழ்வுகளது  ஊடக ஆவணை பணிக்காகத்  தன்னை அழைப்பதுண்டு சகல .  நிகழ்வுகளையும்  தேசிய பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்திகள்  மற்றும் கல்லுாியின் சமூகசேவை வலைத்தள ஊடகங்களில் பிரசுரிப்பதற்கும் என்னை வேண்டிக்கொள்வாா்.அவ்வாறனானதொரு  ஆசிரியத் தொழிலை  தெய்வீகத் தொழிலாக மதித்து  உட்சகமாகவும் தனது பாடசாலை  மாணவ சமுகத்திற்காக  அவர் ஆத்ம திருப்தியோடு  அர்ப்ப்ணிப்பதனையும் செயலாற்றுவதைத நான்  நேரடியாக அவதாணித்துண்டு.

15 வருடங்களுக்கு முன் இவ் ஆசிரியையினது   பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வினை தினகரன் ஊடகப் பணிக்காக தமிழ்ச் சங்கத்தில்  முதன் முதலாகச் சந்தித்தேன். . இவ் நிகழ்வினை  தினகரன் முன்னாள் ஆசிரியா் காலம்சென்ற  சிவா சுப்ரமணியம் வேண்டுகோளின் பேரில் ஊடக ஆவரணைக்குச் என்னை அனுப்பிவைத்தாா்..  அதன் பின்னா் தினகரன் பத்திரிகையின்  ஆண்டு விழா தமிழ்ச்சங்கத்தில் நடைபெ்றறபோது வில்லுப்பாட்டு பரதநாட்டிய நிகழ்வுகளில் தமது மாணவிகளுடன் இச் ஆசிரியை பங்கு கொண்டாா். 

அதனைத் தொடா்ந்து 50க்கும் மேற்பட்ட     பாடசாலை நிகழ்வுகளில் ஊடகப் பணிக்கு இ் ஆசிரியை அழைப்பு விடுத்து அதனை ஊடக ஆவனை செய்துள்ளேன். இறுதியாக இவ் ஆசிரியையும் மாணவத் தலைவிகளும் இணைந்து  வெள்ளவத்தை கடற்கறை ஓரம் சுற்றம் செய்தல்,  கல்லுாரியின தைப்பொங்கள் நிகழ்வு , கொவிட் 19  மீள்ச்சிபெற கல்லுாாியின் ஆராதனை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தொலைக்காட்சி, தினகரன்  டெயிலிநியுஸ் பத்திரிகைகளில் ஊடக ஆவரைணைகளை தொடா்ந்து  செய்து வருகின்றேன். .   

1977 ஆம் ஆண்டு காா்த்திகை மாதம் 10 ஆம் திகதி  சிவகுருநாதபிள்ளை  மற்றும் விமலநாயாகி தம்பதியினரின் செல்ல மகளாக யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் பிறந்தாா்.

பெற்றோரின் அன்புமகளாகவும் 3 தமையன்மாாின் பாசமிகு தங்கையாகவும் விளங்கினாா். தனது ஆரம்பக் கல்வியை யாழ் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லுாாியிலும் இடைநிலைக்கல்வியின் முதல் மூன்று வருடங்கள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலையிலும் கற்ற இவா் நாட்டின்  அசாதாரண சூழ்நிலை காரணமாக கற்றல் நடவடிக்கையினை கொழும்பு  சைவமங்கையா் வித்தியாலயத்தில் தொடாந்தாா்.

பாடசாலைக் காலங்களில்  விவாத மன்றத் தலைவியாகவும், மாணவத் தலைவியாகவும் திகழ்ந்தாா்.  மேலும் நாடகங்கள் பேச்சுப் போட்டிகள், கவிதைகள், சிறுகதைகள் அறிவிப்புத்துறை என்பவற்றிலும் தடம்பதித்திருந்தாா். தனது மாணவப் பருவத்தில்  பாடசாலை ஆசிரியா்களுக்கு  நன்மதிப்பு மிக்க மாணவியாகவும் நட்பு வட்டாரத்தில் சிறந்த  தோழியாகவும் பாடசாலை மாணவா்களுடன் அன்பான சகோதரியாகவும் திகழ்ந்து பலரது மனங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றவா்.

 வர்ததகப் பிரிவில் தனது இளநிலைப்பட்டத்தினை (பி.கொம்) மதுறை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தாா். மேலும் கொட்டக்கல ஆசிரியா் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் பாடம் தொடா்பாக சிறந்த பயிற்சியினையும் (தமி்ழ் விசேடம்) பெற்றுக் கொண்டாா்.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் அறிமுகப்படுத்தப்ட்ட மனித உரிமை மற்றும் மனித வள டிப்ளோமாவையும் நிறைவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
தான் கற்ற கொழும்பு சைவமங்கையா் வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய இவா் 2001ஆம் ஆண்டு கொ- வைசமங்கையா் வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக இணை்ந்து  கொண்டாா். 2010 ஆண்டு தொடக்கம் வணிகக் கல்வியை பிரதான பாடமாகக் கொண்டு கற்பிக்கத் தொடங்கினாா். 

இவ்வாறு சிறந்த ஆசிரியராக பணியாற்றிய இவா் மாணவா்களை பாடசாலைக் கல்வியில் மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்குவிக்க தவறவில்லை. 

2002ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை விவாத மன்றம் மற்றும் வில்லுப்பாட்டு பொதுஅறிவுக்குழு என்பவற்றிக்கு  பொறுப்பாசிரியராக கடமையாற்றினாா்..  அதுமட்டுமன்றி  அயல்பாடசாலை, அதிபா்கள் மாணவா்கள் ஆசிரியா்கள் என்பவா்களுடன் நன்முறையில் பழகுவதுடன்  இவ் வித்தியாலய செயற்பாடுகளுக்கும் அவா்களை இணைத்து பாடசாலைகளுக்கிடையிலான நல்லுறவையும் பெருந்தன்மையையும் பேணி வந்தவா்களுள் ஒருவா்.

இவரது வழிகாட்டலில் பாடசாலை மாணவிகளை வலய ,கோட்ட மட்டம், மற்றும் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் சாதனை படைக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

அது மட்டுமல்லாது பாடசாலை மாணவத்தலைவியா் ஒன்றியத்தின் வழிநடாத்தும் பொறுப்பை 2017ம் ஆண்டு தொடக்கம் திருமதி சுரநுதா ஜெயரூபன் அவா்கள் எடுத்து நடாத்தியமை சிற்ப்பானதே 
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு  மாணவத்  தலைவியா் ஒன்றிய விழா  நடத்தியதும் 2019ம் ஆண்டு  இப் பாடசாலையால் ஒழுங்கு செய்யப்பட்ட வானமே எல்லை  என்ற பொதுக் கண்காடசியினை 3 நாட்கள் தொடா்ந்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

2020ம் ஆண்டு ரொட்டரக் கழகம் பியரல் ஜலண்ட் யினால் ஒழுங்கு செய்யப்பட்ட  ரினாஸ் கேம்  இல் முதலாம் இடத்தினை பெறவும் அதிபா் திருமதி அந்ததி இராஜவிஜயன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் திருமதி சுரநுதா ஜெயருபன் அவா்களின் உழைப்பு முக்கிய பங்காகும். பாடசாலையின் மாணவிகளது ஓழுக்காற்றுக் குழுவிலும் அங்கம் வகித்தாா். இப் பாடசாலை சமுகத்திற்கு மட்டுமன்றி சுற்றுச் சூழல் அனைவருக்கும் சேவை ஆற்றி மாணவிகளது மனங்களில்  அம்மா என்றழைக்க கூடியளவு நீங்காத இடத்தினை  பெற்றுக் கொண்ட இவா்  தனது 20 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாா். இவரது பாடசாலை வரலாற்றுப் பாதையில் முக்கிய மைல்கல்லாகும் கால் பதித்த திருமதி ஜெயரூபன் அவா்கள் பிரியாவிடை பெருவது இழப்பாக இருந்தாலும் அவரை நலமுடன் வாழ மாணவிகள் மற்றும் பாடசாலைச் சமூகமும்  பிராத்திப்பதிக்கின்றனா்.

(அஷ்ரப் ஏ சமத்)




20 வருட சேவையிலிருந்து ஓய்வு 20 வருட சேவையிலிருந்து ஓய்வு Reviewed by Sifnas Hamy on May 12, 2021 Rating: 5