நிந்தவூர் பிரதேசத்தில் நோன்புப்பெருநாளை முன்னிட்டு கொரோனா தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் அப்பிரதேச மக்களை கேட்டுள்ளார்.
அதனடிப்படையில்,
1. கடற்கரை, பூங்கா, பொது மைதானம் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் (உள்ளூர், வெளியூர்) ஒன்றுகூடுவது மறு அறிவித்தல் வரும்வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
2. உணவகங்கள் மற்றும் ஏனைய வியாபார தளங்களில் சமூக இடைவெளி பேனலுடன்கூடிய சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
3. (சுன்னத்தான) நோன்புப் பெருநாள் தொழுகையினை தீவிர தொற்றுநோய் நிலமையினை கருத்தில்கொண்டு தங்களின் வீடுகளில் வீட்டின் அங்கத்தவர்களுடன் மாத்திரம் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேற்படி அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, பகுத்தறிந்து நடப்போம் - களியாட்டங்களை தவிர்போம் - எமது உறவுகளை பாதுகாப்போம் என்றும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
