பலஸ்தீன முஸ்லிம்களுக்கும், கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் விசேட துஆக்களை செய்யுமாறு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின்
நிலையான சமதானம் நீடிக்கவும், சிறுபான்மை சமூகம் பிரச்சினைகளின்றி தமக்கான
உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கும் இத்திருநாளில் பிரார்த்திக்க வேண்டும் என
தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
முஷரப் முதுநபீன் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக- புரிந்துணர்வுடன் - தியாக
சிந்தையுடன் செயலாற்ற இந் நன்நாளில் உறுதிபூண வேண்டும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
“உள்நாட்டிலும்
- வெளிநாட்டிலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க
வேண்டும். இத்திருநாளில் பாலஸ்தீன முஸ்லிம்களுக்காகவும், நாங்கள்
அநியாயாமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர்
றிசாட் பதியுதீன் மற்றும் ஏனைய அரசியல் மார்க்க தலைவர்களின் துரித
விடுதலைக்காவும் விசேட துஆக்களில் ஈடுபடவேண்டும்.
இன்று
மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் கைதினை கண்டிக்கும் வகையில் என்னால்
முன்மொழியப்பட்ட கறுப்பு கொடியேற்றி எதிர்ப்பினை வெளியிடுவதன் மூலம்
புனிதமான இப்பெருநாள் தினத்தில் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு
தெளிவான செய்தியினை வழங்க முடியும் என நம்புகிறேன். அதற்காக சமூக
வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விடப்படும் விமர்சனங்கள் சுய அரசியல் இலாபம்
தேடும் முயற்சியாகும். சகோதர முஸ்லிம்கள் பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய
இராணுவத்தினரால் கொல்லப்படும் வேளையில் நாங்கள் இங்கு சந்தோஷமாக இருக்காமல்
அம்மக்களது துன்பத்தில் பங்கு கொள்ளும் வகையில் பிரார்த்தனைகளில்
ஈடுபடவேண்டும்”
முஸ்லிம்கள்
ஒற்றுமையாக – புரிந்துணர்வுடன் - தியாக சிந்தனையுடன் செயலாற்ற இந்த
நன்நாளில் உறுதி பூணுவோம். எம்மிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலே எமக்கு
எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும்
மார்க்கம். அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள நாங்கள்
முயற்சி செய்ய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும்
இனவாதம் தலைதூக்குவதை நிறுத்த நமது நற்பண்புகள் மற்றும் அந்நிய
மத்த்தவர்களுடன் எவ்வாறு வாழ வேண்டும் என இஸ்லாம் கற்றுத்தந்துள்ள
வழிமுறையின் படி வாழுவேமேயானால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் என அவர்
தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் கற்றுத்தந்துள்ள வழிமுறையின் படி வாழுவேமேயானால் இன்ஷா அல்லாஹ் வெற்றி
Reviewed by Sifnas Hamy
on
May 12, 2021
Rating:
