முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்து கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிஸார் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.

நேற்று மாலை பூவரசங்குளம் செங்கல்படை பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட போது குறித்த காணியில் முட்டி ஒன்றினுள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டபின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முட்டி ஒன்றிற்குள் இருந்து 30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை இன்று சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 



முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு Reviewed by Sifnas Hamy on May 18, 2021 Rating: 5