மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு!

நாட்டின் பொருளாதாரம்  குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்தகொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அது தொடர்பான பகுப்பாய்வு குறுத்து தெளிவுபடுத்தினர்.

கொவிட் தொற்று  நிலைமைக்கு மத்தியில் நாட்டில் பொருதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய கௌரவ பிரதமர், மத்திய வங்கியின் பங்கை முறையாக நிறைவேற்றுமாறும் ஆலோசனை வழங்கினார்.

குறித்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித  ராஜபக்‌ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்‌ஷ்மன்,  மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான டீ.எம்.ஜே.வை.டீ. பெர்னாண்டோ, கே.எம்.எம்.சிறிவர்தன, எம்.டப்ளிவ்.ஜீ. ஆர்.டீ.நாணாயக்கார, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர ஆகியோர் கலந்து கொண்டார்.

(பிரதமர் ஊடக பிரிவு)


மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு! மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு! Reviewed by Editor on May 21, 2021 Rating: 5