(முஹம்மட் ஹாசில் -ஊடகவியலாளர்)
ஹொரவ்பொத்தான, குழுமிவாக்கட பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நேற்று (20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பல வருட காலமாக நோய்வாய்பட்டிருந்த குறித்த பெண் நேற்று காலை வீட்டில் உயிரிழந்துள்ளார், பின்னர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளால் பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு, பி.சி.ஆர் மாதிரி அனுராதபுரபுர மெத்சிரி செவன வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த பீ.சீ.ஆர் பரிசோதனையில் முடிவின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இன்று (21) காலை கண்டறியப்பட்டு ஹொரவ்பொத்தான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோரால் குறித்த இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பைப் பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குறித்த பெண்ணின் ஜனாஸாவை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
