கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் ஜனநாயக இடதுசாரி முன்னணியில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ரியாஸ்தீன் அவர்களின் தலைமையில் நேற்று உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவநாணயகார அவர்களிடம் கட்சி அங்கத்துவத்தை நஜீப் ஏ மஜீட் அவர்கள் பெற்றுக்கொண்டதோடு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை திருகோணமலை மாவட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியின் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயகார,கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மரைக்கார்,முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ரியாஸ்தீன் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அணித் தலைவி ரைசா ஆகியோருடன் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Reviewed by Editor
on
May 18, 2021
Rating:

