(கனகராசா சரவணன்)
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று இன்று புதன்கிழமை (26) உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 32 பொலிஸாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கிய பின்னர் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலி, காத்தான்குடி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டு!!!
Reviewed by Editor
on
May 26, 2021
Rating:
