(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கல்விப்பிரிவு (AMFAU) நேற்று (22) சனிக்கிழமை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்,
பலமாத களப்பணியில் பல்வேறு கலந்துரையாடல்கள் மூலம் உருவாக்கிய இந்த திட்டம் இறைவனின் உதவியுடன் அதனை முளுமைபடுத்தி ஆரம்பித்து வைத்துள்ளோம்.
இறைவன் எனக்களித்துள்ள அமானிதங்களில் பொறுப்புக்கூறளிலிருந்து துளி அளவேனும் விலகி இருக்கமாட்டேன் எங்கள் வேலைத்திடங்கள் மக்களின் முன்னேற்றத்துக்காகவே இருக்கும் என்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சபீஸ் தெரிவித்தார்.
நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், கல்வி துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
