மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியொன்றினை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரனையோடு இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலேசியாவில் இயங்கி வரும் சமூக நல அமைப்பான அலாகா தொண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் 11 மில்லியன் பெறுமதியான பீ.சி.ஆர் இயங்திரத்துடன் உப இயந்திர சாதன தொகுதியொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மனிதநேய செயற்பாட்டிற்காக மாவட்ட மக்களின் நன்மை கருதி பாரியதொரு நிதிப் பங்களிப்பின் மூலமாக பீ.சி.ஆர் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரனையோடு இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்திற்கு மாவட்ட கொவிட் செயலணி இதன்போது நன்றி தெரிவித்து பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்சமய ஒன்றியத்தினால் பீ.சி.ஆர் இயந்திரம் வழங்கிவைப்பு!
Reviewed by Admin Ceylon East
on
May 28, 2021
Rating:
