அதிபர்,ஆசிரியர்களின் சம்பள உயர்வு இப்போது சாத்தியமில்லை.

தேசிய சம்பள ஆணைக்குழு புதிய தேசிய சம்பளக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக தொழிற்சங்கங்களிடமிருந்து பிரதிநிதித்துவங்களை அழைத்தல்.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிய 2162/64 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியூடாக அரச மற்றும் தனியார் துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் நிலைபேறு தன்மையை தொடர்ந்தும் பேணும் வகையில் அத்துறைகளின் சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புகளை மீளாய்வுக்குட்படுத்தி ஒட்டுமொத்த அரச துறையினதும் அதேபோன்று தனியார் துறையினதும் உழைப்புப் படைகளின் தேவைகளைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கான தேசிய சம்பளக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கும் அதனை அமுல் செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் உதவும் வகையிலும் அதிமேன்மை தங்கிய சனாதிபதி அவர்களினால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2. அதற்கமைய, தேசிய சம்பளக் கொள்கையொன்றைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கருதும் யோசனைகள் தொடர்பாக எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை, அது குறித்து ஆர்வமுள்ள தொழிற்சங்கங்களிடமிருந்து தருவிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அவ் எழுத்து மூல பிரதிநிதித்துவங்கள் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை மென்மேலும் அர்த்தமுள்ள வகையில் அமுல் செய்வதற்காக இக்கால கட்டத்திலும் எதிர்வரும் காலங்களிலும் அரச சேவைக்குத் தேவைப்படுகின்ற முகாமைத்துவ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் நிபுணத்துவ அறிவுடைய தேர்ச்சிமிக்கோரை அரச துறையில் அந்தந்த துறைகள் மீது கவர்ந்திழுக்கும் வகையில் வேலைவாய்ப்பு நிலைமைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள்.

உயர் உற்பத்தி விளைவுப் பெருக்கத்தையும் வினைத்திறனையும் பெற்றுக் கொள்வதற்கு அரச சேவையினை வழிநடாத்த வேண்டிய தேவையையும் அதேபோன்று தனியார் துறையின் உழைப்புப் படைத் தேவையையும் நிவர்த்தி செய்வதில் காணப்படுகின்ற தடைகளை நீக்குவதற்கான யோசனைகள்

அரச துறையிலும் அதேபோன்று தனியார் துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை திருப்தியும், ஊக்கமும் உடையவர்களாகவும் தேவையான தேர்ச்சியை உடையவர்களாகவும் மாற்றியமைப்பதற்கான யோசனைகள்

• அரச சேவையில் நிரந்தரப் பதவி வகிக்கின்ற தொழில்சார் தகைமைகளையும் திறமைகளையும்: கொண்ட உத்தியோகத்தர்களை, அரச சார்பு மற்றும் தனியார் துறைகளில் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுவதையும் அதனூடாக அரச சேவையை விட்டு விலகுவதைத் தவிர்க்கும் வகையில், தேவையான கொள்கைகளைத் தயாரிப்பதற்கான யோசனைகள்

அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் தற்சமயம் அமுல் செய்யப்பட்டு வருகின்ற பணிக்கொடை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறுபட்ட ஊக்குவிப்பு முறைகள், கொடை அளிப்பு முறைகள் மற்றும் நிதி சாரா ஊக்குவிப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான யோசனைகள்

சமமான பொறுப்புகளை வகிக்கும் அல்லது சமமான தகைமைகளைக் கொண்ட பணியாளர்கள் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சம்பளம், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கிடையில் முரண்பாடுகளிருப்பின் அவற்றைக் குறைப்பதற்கான யோசனைகள்

இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புகள் காரணமாக எழுந்துள்ள சம்பள முரண்பாடுகளை சரி செய்வதற்கான யோசனைகள்

தற்போது அமுலிலுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவு, பதவியணியும், சேவை தரங்களும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளும், பதவியுயர்வு நடைமுறைகளும் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பு சார்ந்ததாக எழுந்துள்ள பிரச்சினைகள் சிக்கல்கள் காரணமாக தோன்றியுள்ள முரண்பாடுகளைக் குறைப்பதற்கான யோசனைகள்

தேசிய அபிவிருத்தியின் பொருட்டு அரச துறையும், தனியார் துறையும் உள்நாட்டு உழைப்பு வளத்தை உச்ச மட்டத்தில் பயன்படுத்துவதற்குரிய பிற யோசனைகள்

3. சகல எழுத்துமூல பிரதிநிதித்துவங்களும், ஆகக் கூடியது 4 பக்கங்களுக்கு (A4 அளவில் மட்டுப்படும் வகையில் தயாரிக்கப்பட வேண்டியதுடன், அப்பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கு தாவுகளை புள்ளி விபரங்களை மேலதிக தகவல்களைச் சமர்ப்பிக்க தேவைப்படின் மட்டும் அவற்றை இணைப்புகளாக உள்ளடக்கி கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”தேசிய சம்பளக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான யோசனைகள்” எனக் குறிப்பிட்டு 2021 யூன் 17 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்,

செயலாளர்
தேசிய சம்பள ஆணைக்குழு
அறை எண் 2-116
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பௌத்தாலோக்க மாவத்தை கொழும்பு - 07


சந்திராணி சேனாரத்ன
செயலாளர்
தேசிய சம்பள ஆணைக்குழு



அதிபர்,ஆசிரியர்களின் சம்பள உயர்வு இப்போது சாத்தியமில்லை. அதிபர்,ஆசிரியர்களின் சம்பள உயர்வு இப்போது சாத்தியமில்லை. Reviewed by Sifnas Hamy on May 17, 2021 Rating: 5