வாகன விபத்தில் இரு இளம் வயதினர் உயிரிழப்பு!!!

இன்று (07) வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியின் மீயான்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் வேக கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தனியார் பஸ் உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். பரமேஸ்வரன் தனுயன் (வயது 31) மற்றும் வினோகா துரைசிங்கம் (வயது 31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் இரு இளம் வயதினர் உயிரிழப்பு!!! வாகன விபத்தில் இரு இளம் வயதினர் உயிரிழப்பு!!! Reviewed by Editor on May 07, 2021 Rating: 5