முதலமைச்சராக பதவி ஏற்றார் ஸ்டாலின்!!!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை 9.00மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், தி.மு.க மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராக பதவி ஏற்றார் ஸ்டாலின்!!! முதலமைச்சராக பதவி ஏற்றார் ஸ்டாலின்!!! Reviewed by Editor on May 07, 2021 Rating: 5