2020-2021 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கேட்டுள்ளார்.
விண்ணப்பங்களை apply2020ShUGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கான வழிகாட்டல் நூலை விண்ணப்பிக்கும் அதே நாளில் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பங்கள் ஜூன் 11ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Reviewed by Admin Ceylon East
on
May 20, 2021
Rating:
