(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் மக்கள் ஆர்வத்துடன் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகளில் அத்தியவசிய பொருட்கள் விற்பணை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டதுடன் மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டனர்.
மரக்கறி வகைகள் தேங்காய் உட்பட பழங்கள் ஏனைய அதிதியவசியப் பொருட்கள் என்பவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதை காணமுடிந்தது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறின் தலைமையில் காத்தான்குடி பொலிசார் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பொது மக்கள் ஒன்று கூடாதவாறு கண் காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன் போது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
