அக்கரைப்பற்று அப்சல் (ஆட்டோ சாரதி) காலமானார்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று பதூர் நகர் பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்தவரும், அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட ஆட்டோ சாரதியுமான சேகு அப்சல் என்பவர் இன்று (25) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பதூர் மையவாடியில் இன்று ளுகர் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஐவேளை தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுபவராகவும், மற்றவர்களுடன் மிகவும் அன்பாகவும் சிநேகமாகவும் பழகும் நற்குணமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.




அக்கரைப்பற்று அப்சல் (ஆட்டோ சாரதி) காலமானார்!!! அக்கரைப்பற்று அப்சல் (ஆட்டோ சாரதி) காலமானார்!!! Reviewed by Editor on May 25, 2021 Rating: 5