முச்சக்கர வண்டி ஓட்டுணா் மகள் தேசிய ரீதியில் முதலிடம் (படங்கள்)

அகில இலங்கை ரீதியாக கலைப்பிரிவில் தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை தெகிவளை பெஸ்ப்தேரியன் பாடசாலையில் கற்கும் சமல்ஹா சிவ்மினி பெற்றுள்ளாா். சிவ்மினி தெகிவளை மிருகட்சிச் சாலை பின்புறத்தில் உள்ள 2 பேர்ச் மாநகர வீட்டுத்தி்ட்ட குடியிருப்பில் வாழ்கின்றாா். தந்தை சாதாரனமாக வாடகைக்கு அமா்தத்ப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுணா். கொவிட் காலத்தில் மட்டும் ஸூம் ஒன்லைன் 2 பாடங்களை மட்டுமே படித்தேன். க.பொ.த.சா-த தரத்தில் சிறந்த பெறுபேறுகள் எடுத்தும் நான் கலைப்பிரிவினையை விரும்பிப் படித்தேன் அதில் மனைவியல் பொருளாதாரம் , ஊடகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை விரும்பி வீட்டில் படித்தேன். கொவிட் காலங்களில் அனேகமாக பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் கூடிய காலங்கள் லொக் டவுன் மூடி இருந்தது. எதிர் காலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வருவதற்கே நான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தாா். அத்துடன் எனது பெற்றாா். ஏனைய உப அதிபா்கள் ஆசிரியா்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் அத்துடன் எனது பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் பெயர் பெற்றுக் கொடுத்ததையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன் என மாணவி கூறினாள்

மேலும் கல்லுாாி அதிபா் திருமதி. எஸ். கே. சி. முத்துநாயக்க தகவல் தருகையில் கொழும்பில் பிரபல பாடசாலைகளே கடந்த காலங்களில் முதல் இடங்களை பெற்றுவந்தன. நீண்டகாலத்திற்குப் பிறகு கொள்ளுப்பிட்டி -இருந்து மொரட்டுவை வரையிலான சிங்கள பாடசாலைகளுள் இதுவே முதல் தடவை எமது கல்லுாாி மாணவி சிவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமையாகும். எமது பாடசாலை 110 வருடங்கள் பழமை வாய்ந்த பெஸ்பேத்தேரியன் பாடசாலைக்கு பெயர்பெற்றுக் கொடுத்தனை இட்டு நான் பெருமையாகக் கொள்கின்றேன்.

(அஷ்ரப் ஏ சமத்)





முச்சக்கர வண்டி ஓட்டுணா் மகள் தேசிய ரீதியில் முதலிடம் (படங்கள்) முச்சக்கர வண்டி ஓட்டுணா் மகள் தேசிய ரீதியில் முதலிடம் (படங்கள்) Reviewed by Sifnas Hamy on May 05, 2021 Rating: 5