கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலைபெற்ற மகேஸ்வரன் கயலினி என்ற மாணவி கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவராவார்.
பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்ற கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவராவார்.
இம்மாணவி இரண்டு A, ஒரு B பெறுபேறுகளை பெற்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
மூன்று சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் ஒருவர் திருமணம் செய்துள்ள நிலையில் இரண்டாவது சகோதரி யாழ்பல்கலைகழகத்தின் தொழிநுட்ட பீடத்தில் கல்வி கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Editor
on
May 05, 2021
Rating: