கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி தனியார் ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை சேர்ந்த 22 வயதுடைய தவராசா விதுசாஜினி என்ற யுவதியே தூக்கிட்டு நேற்று (01) தற்கொலை செய்துள்ளார்.
இவரது பெற்றோருக்கு மூன்று ஆண் மக்களுடன் இவர் மட்டுமே பெண் பிள்ளையாகும். இவர் காதல் வயப்பட்டிருப்பது கடந்த ஆறு மாதங்களாகத்தான் பெற்றோர் அறிந்திருக்கின்றனர்.ஆனாலும் பெற்றோர் எதிர்ப்புக் காட்டவில்லை.
கல்வியறிவு குறைந்த பெற்றோர், காதலன் யார்? எந்த ஊர்? என்று கூட மகளிடம் கேட்டுக்கொள்ளவில்லையென்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நேற்று மே தின விடுமுறை என்ற காரணத்தினால் வேலைக்கு செல்லாமலிருந்த இந்த யுவதி பகலுணவு உட்கொண்டபின் அவரது படுக்கையறைக்குள் சென்று உறங்கியிருக்கிறார். மாலை நேரம் தேனீர் குடிப்பதற்காக இவரது தாய் எழுப்பியபோது, படுக்கையறைக் கதவு பூட்டப்பட்டு இவரது சத்தம் எதுவுமே வெளிவராத நிலையில், கத்தியைக் கொண்டு கதவை தெண்டி திறந்த போதுதான், வீட்டுவளையில் சாறியொன்றினால் மகள் தூக்கிட்டு தொங்கி மரணித்திருப்பதை அடையாளம் கண்டுள்ளார்.
காதல் விவகாரம் தான் தற்கொலையில் முடிவுற்றிருக்கிறது என்பது யுவதியின் கைத்தொலைபேசி மூலம் அறியக்கிடைத்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதி தற்கொலை செய்ய காரணம் என்ன?
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
