இலங்கை அணிக்கு அமோக வெற்றி!!!


பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 209 ஓட்டங்களால் இலங்கை அணி அமோக வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகலே சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று  (03) திங்கட்கிழமை இலங்கை அணி இந்த வெற்றியை வெற்றது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 493 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்தியது.

 
இதற்கமைவாக பங்களாதேஷ் அணிக்கு 437 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 227 ஓட்டங்களையு மாத்திரமே பெற்றது.
 
இலங்கை அணியின் சார்பில் பந்து வீசிய பிரவின் ஜயவிக்கிரம 86 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றினார். இதற்கமைவாக இவர் தனது கன்னி டெஸ் போட்டியிலேயே 11 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
 
இரு அணிகளுக்கிடையிலான  முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்ததுடன் இலங்கை அணி இத்தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னி வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
இலங்கை அணிக்கு அமோக வெற்றி!!! இலங்கை அணிக்கு அமோக வெற்றி!!! Reviewed by Editor on May 04, 2021 Rating: 5