சுகாதார தரப்பினருடன் பைசால் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!!

 (றிஸ்வான் சாலிஹூ)

கல்முனை பிராந்தியத்தில் தற்போதைய   கொரோனா வைரசின் தாக்கம் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடலொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திகாமடுல்ல மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ பைசால் காசீம் தலைமையில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்தியத்தில் காணப்படும் சில வைத்திசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுவது தொடர்பாகவும் வைத்தியசாலைகளில் காணப்படும்  HDU பிரிவுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் வைத்தியசாலைகளில் காணப்படும் ஒட்சிசன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார தரப்பினருடன் பைசால் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!! சுகாதார தரப்பினருடன் பைசால் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5