நச்சுத்திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் பெண் கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் மதுபானத்தில் நச்சுத்திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கடந்து இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் மதுபானம் அருந்தும் போத்தலில் நச்சு திரவத்தை கலந்துள்ள நிலையில், அவர் அதனை அருந்திய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் அருந்திய மதுபானத்தை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்தபோது அதில் நச்சுத்திரவம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து குறித்த நபரின் மனைவியை ( 51 வயது) சந்தேகத்தின் பேரில் இன்று பொலிஸார் கைது செய்ததுடன்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


நச்சுத்திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் பெண் கைது நச்சுத்திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் பெண் கைது Reviewed by Sifnas Hamy on May 21, 2021 Rating: 5