வீடுகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம்!!!

சதொசவின் 1998 ஹொட்லைனை அழைப்பதன் மூலம் அல்லது www.lankasathosa.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நிவாரணப் பொதிகள் உட்பட பிற அத்தியாவசிய பொருட்களை வீட்டு வாசலிலேயே பெற முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டுறவு மொத்த விற்பனைக் கடைகளின்CWE) வலைத்தளம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 1000 ரூபா அல்லது 5000 ரூபா பெறுமதி கொண்ட பொருட்கள் அடங்கிய பொதிகளைப் பெறலாம்.
சதொசவின் வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் 114 விதமான பொருட்களைப் பெறலாம் என்பதுடன் நீங்கள் செலுத்தும் விலைக்கு அதிக மதிப்புள்ள பொருட்களைப் பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(தினக்குரல்)



வீடுகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம்!!! வீடுகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம்!!! Reviewed by Admin Ceylon East on May 28, 2021 Rating: 5