அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலையே வெளியேற முடியும்

நாளை (13) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணின் அடிப்படையிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும்.






அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலையே வெளியேற முடியும் அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலையே வெளியேற முடியும் Reviewed by Sifnas Hamy on May 12, 2021 Rating: 5