சியொனிஸ இஸ்ரேலினால் 1948 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாலஸ்தீன சிறுவர் பெண்கள் உட்பட நிராயுதபாணிகளான சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்வதைக் கண்டித்து உலகம் முழுவதும் முற்போக்கு சிந்தனைகொண்ட மக்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு இணைவாக நேற்று (15) சனிக்கிழமை இத்தாலியில் பல நகரங்களில் பாரிய அளவிலான மக்கள் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இத்தாலியின் பிரன்சே நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி இத்தாலி செயற்குழு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சர்வதேச ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனத்துக்காக குரல் கொடுக்கும் JVP தோழர்கள்!!!
Reviewed by Editor
on
May 16, 2021
Rating:
