கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு இவர் சென்றதன் காரணமாகவே தொற்றிற்குள்ளாகிய நிலையில் இரண்டு வாரங்களிற்கு முன்னர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
லங்கா சமசமாஜ கட்சியின் உறுப்பினரான இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.பி ஒருவர் கொரோனாவால் மரணம்!!!
Reviewed by Editor
on
May 30, 2021
Rating:
