நகரசபைத் தலைவரின் உயிரிழப்பு தொடர்பில் மூவர் கைது!!!

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் இன்று (24) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் இருந்துள்ளமை, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர பிதா கே.ஏ.பாயிஸ் திடீர் விபத்தொன்றில் நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளது தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையிலேயே, அவரது சாரதி உள்ளிட்ட மூவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நகரசபைத் தலைவரின் உயிரிழப்பு தொடர்பில் மூவர் கைது!!! நகரசபைத் தலைவரின் உயிரிழப்பு தொடர்பில் மூவர் கைது!!! Reviewed by Editor on May 24, 2021 Rating: 5