(ஏறாவூர் நஸீர்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற விபத்தில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற காரானது கொம்மாதுறையில் வைத்து திடீரென பாதை மாறிப் பயணித்து மறுபக்கமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்தவர்களை மோதி, எதிரே காணப்பட்ட NIRUTHA RESTAURANT மதிலையும் உடைத்துக்கொண்டு சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்த நான்கு பேரே காயமடைந்தவர்களாவார்கள்.
விபத்துக்கு காரணமான காரின் சாரதி தலைமறைவாகி உள்ளதால் சாரதியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்கள்.
ராஜாங்க அமைச்சர் வியாழேந்தரனின் இணைப்பாளரான முரளீதரன் என்பவரே காரை செலுத்தி வந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பலரும் பொலிசாருக்கு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Reviewed by Editor
on
May 11, 2021
Rating: