நாட்டில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பயண கட்டுப்பாடு ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கோவிட் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பயண கட்டுப்பாடு ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றே முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதும், அதனை மேலும் நீடிக்க வேண்டிய தேவை நிலவுவதால், ஜூன் மாதம் 14ஆம் திகதி காலை 4:00 மணி வரை பயண தடையை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
14ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு!!!
Reviewed by Editor
on
June 02, 2021
Rating:
