மூன்றாவது அலைக்கான பணம் வழங்கல்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

Covid- 19 மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 1ம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று மேற்கு, கிழக்கு வங்கிகளில் இன்று (02) புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.பி.முஹம்மட் ஹூசைன், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.கே.எம்.நழீம், திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், வங்கி முகாமையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



மூன்றாவது அலைக்கான பணம் வழங்கல்!!! மூன்றாவது அலைக்கான பணம் வழங்கல்!!! Reviewed by Editor on June 02, 2021 Rating: 5