இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 169 பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கட்டாரில் இருந்து இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின. அதில் முதல் உள்வரும் பயணிகள் விமானம் கத்தார் தோஹாவிலிருந்து அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் தரையிறங்கியது.
அத்தோடு, தோஹாவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 விமானம் அதிகாலை 4.05 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில்116 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு விமானங்கள் ஊடக பயணிகள் வருகை!!!
Reviewed by Editor
on
June 01, 2021
Rating:
