நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விடுதி திகாமடுல்ல மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் இன்று (30) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இதனால் நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா தெற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் வசதிகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளமை வரவேற்க கூடிய விடயமாகும்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பறூசா நக்பர் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.பீ.எம். பாருக் இப்றாஹீம் அவர்களும் மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
