பிரதி பணிப்பாளராக பெண் ஒருவர் நியமனம்..

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் (CID) பிரதிப் பணிப்பாளராக பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) இமேஷா முத்துமலா CID யின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஒப்புதலின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டது.

SSP இமேஷா முத்துமாலா 2007 நவம்பர் 03 ஆம் தேதி உதவி போலீஸ் அத்தியட்சகராக (ASP) நியமிக்கப்பட்டு, போலீஸ் சேவையில் 14 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.



பிரதி பணிப்பாளராக பெண் ஒருவர் நியமனம்.. பிரதி பணிப்பாளராக பெண் ஒருவர் நியமனம்.. Reviewed by Editor on June 11, 2021 Rating: 5