மீரா பாலிகா புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்....

(றிஸ்வான் சாலிஹு)

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) புதிய அதிபர் யூ.எல்.மன்சூர் (SLPS -1) தனது கடமைகளை இன்று (14) திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த  அஷ்ஷேக் யூ.எல்.மன்சூர் அவர்கள் கடந்த செவ்வாய்கிழமை (08) கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரோவினால் காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக  நியமிக்கப்பட்டார்.

தனது ஆரம்பக் கல்வியினை அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலையிலும்), அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் தனது மார்க்க கல்வியை கற்று மௌலவி பட்டம் பெற்று அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைப் பட்டத்தினயும் பூர்த்தி செய்தார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தரம் II இற்கான போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர், 2012 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை வெலிகம அறபா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகவும், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2020.12.31 வரை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) அதிபராகவும் பணியாற்றினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி உமர் மௌலானா, காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய (தேசிய பாடசாலை) முன்னாள் அதிபர் எம்.சீ.எம்.சத்தார், பாடசாலை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மீரா பாலிகா புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்.... மீரா பாலிகா புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்.... Reviewed by Editor on June 14, 2021 Rating: 5