மூன்றாவது அலையில் மூழ்காத கல்முனை மாவட்டம், சடுதியாய் மூழ்கும் அபாய நிலை.

(கலீலூர் றஹ்மான்)

▪︎ கல்முனை பிராந்தியத்தில் கடந்த இரு வாரங்களாக கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்வது மட்டுமல்லாது இறப்பு வீதமும் அதிகரித்து செல்வதாக தரவுகள் கூறுகிறது.

▪︎ ஜூன் 17, 2021 அன்று மேலும் 45 கொவிட் நோயாளிகள் கல்முனை மாவட்ட சுகாதார பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டதோடு இருவர் உயிரிழந்துள்ளனர்.

▪︎ இலங்கையில் மூன்றாவது அலையான புத்தாண்டு கொத்தணியில், கொரொனா தொற்றானது ஒவ்வொரு சுகாதார  பிராந்தியத்திலும் 2,000 இற்கும் அதிக நோயாளிகளையும் 100 இற்கும் அதிக மரணங்களையும் கண்டுள்ளது.

▪︎ அவ்வாறு இருந்த போதிலும் கல்முனை பிராந்தியமானது நோயாளிகலிலும் இறப்புக்களிலும் சொல்லப்பட்ட எண்ணிக்கைகளை தாண்டாத ஒரு நிலைமையை தக்கவைத்துக் கொண்டது.

▪︎ பல விமர்சனங்கள் இருந்த போதிலும் அல்லது அவை செயற்கையாக  உருவாக்கப்பட்ட போதிலும், டாக்டர் Sukunan Gunasingam, RDHS அவர்களின் அற்பணிப்பும் (t.ly/4E4z) கரிசனையுமே (t.ly/QJeN) கல்முனை மாவட்டத்தை இலங்கையில் பாதிப்பு குறைந்த ஒரு இடமாக பாதுகாத்துக் கொள்ள உதவியது. 

இதற்காக இந்த மண்ணும் மக்களும் அவருக்கும் அவரது உத்தியோகத்தர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

ஆனால், இன்று பெருகிவரும் பெருந்தொற்றின் வேகம், பொது மக்களாகிய எமது தியாகங்களிலேயே தங்கியிருக்கின்றது என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு செயற்படுவோம்.

எம்மையும் நாம் நேசிக்கும் நபர்கள், நண்பர்கள் மற்றும் உறவுகளின் உயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் பின்வரும் இன்றியமையாத செயற்பாடுகளைப் பேணுவோம்.

1. வெளியே செல்லாமல் இருப்பது.

2. அவசியம் கருதி வெளியே செல்ல வேண்டுமாயின் முகக்கவசம் அணிவது.

3. முகக் கவசம் அணிந்த நிலையிலும் சமூக இடைவேளியப் பேணுவது.

4. சமூக இடைவெளி பேணப்பட்ட போதிலும் சவர்காரம் கொண்டு கைகளையும் உடலையும் நன்கு கழுவிக் கொள்வது.

எமது தற்கொலையை தவிர்ப்போம்.நாம் இன்னொருவரை கொல்லக் காரணமாக அமைவயாமல் தவிர்ப்போம். 




மூன்றாவது அலையில் மூழ்காத கல்முனை மாவட்டம், சடுதியாய் மூழ்கும் அபாய நிலை. மூன்றாவது அலையில்  மூழ்காத கல்முனை மாவட்டம்,  சடுதியாய் மூழ்கும் அபாய நிலை. Reviewed by Editor on June 18, 2021 Rating: 5