கொரோனா தொற்று பரவாமலிருக்க அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் வீதியின் நடுவே அமர்ந்தவாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் தம்புள்ளை நகரில் இன்று (14) திங்கட்கிழமை இடம்பெற்றதோடு, போராட்டம் நடத்தி வந்த பிக்குவை பொலிஸார் அங்கிருந்து நகர்த்த கடும் கஸ்டப்பட்டிருந்தனர்.
திம்புலாகல விகாரையின் விகாராதிபதியான மாத்தளே சாஷனரத்தன தேரரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் கடும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதோடு அதன் பின்னர் நகராதிபதின் வருகையின் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
நடுவீதியில் சத்தியாக்கிரகம் செய்த பௌத்த பிக்கு!!!
Reviewed by Editor
on
June 14, 2021
Rating:
Reviewed by Editor
on
June 14, 2021
Rating:
