Endometriosis பொதுவாக காணப்படும் (1 in 10) நோய்நிலைமையாகும்.
கருப்பையின் உட்சுவரில் மாதவிடாய் சக்கரத்தின் போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது.
முதலில் அது படிப்படியாக தடிப்படையும் பின்னர் கர்ப்பமாவதற்காக தயாராகும். கர்ப்பமைடையாவிட்டால் உடைந்து மாதவிடாயாக வெளியாகும்.
சில சந்தர்ப்பங்களில் கருப்பையின் உற்சுவரில் இருக்கவேண்டிய கலங்கள் வெளி இடங்களில் காணப்படலாம். (உதாரணம் சூலகம், பலோப்பியன் குழாய், வயிற்றுக்குழி)
அவ்வாறு இருப்பின் அக்கலங்களும் அதேபோன்ற மாற்றங்களை அடையும். மாதவிடாய் ஏற்படும் போது அக்கலங்களில் இருந்தும் இரத்தக்கசிவுகளை ஏற்படுத்தும்.
இதனால் பல்வேறுபட்ட நோயறிகுறிகளும் விளைவுகளும் ஏற்படலாம்.
நோயறிகுறிகள்
1. மாதவிடாயின் போது அதிக வலி ஏற்படுதல். குறிப்பாக மாதவிடாய் தொடங்க ஒருசில நாட்களுக்கு முன்னர் வலி ஆரம்பித்தல்.
2. தொடர்ச்சியான வயிற்றுவலி
3. கர்ப்பம் தரித்தல் தாமதித்தல்
4. உடலுறவின் போது அதிகவலி
இந்நோய் சிலரில் சிறிதளவு நோயறிகுறிகளை ஏற்படுத்தும் , சிலரில் மிக தீவிரமான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
சில சந்தர்ப்பங்களில் சூலகத்தில் endometriosis காணப்படும் போது படிப்படியாக இரத்தம் சேர்ந்து சூலகக் கட்டிகளை ஏற்படுத்தலாம். இது chocolate cyst எனப்படும்.
இந்நோய் அறிகுறிகள் இருப்பின் தகுந்த வைத்தியரை நாடி மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
அநேகமானவர்களில் Scan பரிசோதனை சாதாரணமாகவே காணப்படும். சிலரில் சூலகக் கட்டிகள் காணப்படலாம்.
இதனை குறிப்பாக கண்டறிய வேண்டுமாயின் Laparoscopy கமராமூலம் செய்யும் சத்திர சிகிச்சையாலேயே உறுதிப்படுத்தலாம்.
இதன் சிகிச்சை நோயாளியின் நோயறிகுறிக்கேற்ப மாறுபடும். அநேகரில் மாத்திரைகள் மூலம் நோயறிகுறிகளை குறைக்கலாம். இதற்காக வலி நிவாரணிகளும் அதற்கு சரியான நிவாரணம் கிடைக்காவிட்டால் ஹோர்மோன் மாத்திரைகளும் பயன் படுத்தப்படும். மாதவிடாயை குறிப்பிட்டகாலம் நிறுத்திவைப்பதன் மூலம் இந்த நோயின் தீவிரத்தை குறைக்கலாம். கர்ப்பமடைதல் , தாய்ப்பாலூட்டல் போன்றகாலங்களில் மாதவிடாய் இயற்கையாகவே நிறுத்தமடைவதால் இந்நோயின் அளவு குறைவடையும்
எனினும் கர்ப்பமாதலை எதிர்பார்த்திருக்கும் பெண்களில் கமரா சத்திரசிகிச்சை முலம் அவற்றை அகற்றுவதே சரியான சிகிச்சை முறையாகும். Chocolate cyst இருப்பின் அவற்றை சரியான முறையில் அகற்ற வேண்டும். தீவிர நோய் நிலைமை உள்ளவர்களில் குடல் , சிறுநீர்ப்பை , கருப்பை என்பவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்காணப்படும். இதன்போது தொடர்ச்சியான வயிற்றுவலி ஏற்படும். அவ்வாறு இருப்பின் அதனை கமராமூலம் பார்த்து படிப்படியாக முற்றாக அகற்றவேண்டும். அதனை முற்றாக அகற்றாவிட்டால் மீண்டும் மீண்டும் உருவாகலாம்.
எனவே மேற்கூறப்பட்ட நோயறிகுறிகள் இருப்பின் வைத்தியசாலையை நாடி அதற்கான சரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
MBBS MD MRCOG MSLCOG
Consultant Obstetrician and Gynaecologist
Base Hospital Sammanthurai
