சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய வளத்தாபிட்டி பிரதேத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பிரதேசங்களில் தொற்று நீக்கி இன்று (25) வெள்ளிக்கிழமை விசிறப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் கண்காணிப்பில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைவாக சனசமூக நிலையம், கோவில்கள், தனிப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட அதன் சுற்றுபுற சூழல் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வளத்தாபிட்டி பிரதேசம் தொற்று நீக்கப்பட்டது!!!
Reviewed by Editor
on
June 25, 2021
Rating:
