சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் செட்டியாவெட்டை வயல் வெளியில் இறந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (21) திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உபாலி என்றழைக்கப்படும் ஜாபீர் (வயது 60) என்றும், இவர் மது பழக்கம் உள்ள கசாப்புக் கடை ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிந்தவூர் வயல் பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!!!
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
