2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் மட்டுமே ஏற்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (24) முதல் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களுக்கு அதிபரின் பரிந்துரை தேவையில்லை எனவும் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் (www.doenets.lk) வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். கைத்தொலைபேசிகளுக்காக நாம் உருவாக்கிய விஷேட app மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
(தினக்குரல்)
உயர்தர மீள் பரீட்சைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!!
Reviewed by Editor
on
June 24, 2021
Rating:
