தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது!

சகல பௌர்ணமி தினங்களிலும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இடம்பெறும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 211ஆவது உபதேச நிகழ்வு மஹிந்த தேரரின் உன்னத இலங்கை வருகை இடம்பெற்ற பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தர்ம உபதேச நிகழ்வில் உடுகம்பொல தொம்பவெல ஸ்ரீ சத்தர்மகுப்த பிரிவேனாவின் மூல மஹா விகாராதிகாரி பிரதி கல்வி பணிப்பாளர் தர்ஷனபதி ராஜகீய பண்டித கொப்பேவல மேதங்கர தேரர் பங்கேற்றார்.

சமய வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்ற ராஜகீய பண்டித கொப்பேவல மேதங்கர தேரரை, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார்.

பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் அமாதம் சிசிலச உபதேசத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்ற 211ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றனர் என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.





தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது! தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது! Reviewed by Editor on June 24, 2021 Rating: 5