நீர்வழங்கல் சபையினால் சிகிச்சை நிலையங்களுக்கு படுக்கைகள் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு 325 படுக்கைகள் இன்று (16) புதன்கிழமை சபையின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  அனைத்து உபகரணங்களுடன்  325 படுக்கைகளை, தேவைப்படும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கும் இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கும் வழங்கியுள்ளது. 

இது ,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று சபை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சபையின் பொது முகாமையாளர், மேலதிக பொது முகாமையாளர்கள், அமைச்சின் மற்றும் சபையின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.






நீர்வழங்கல் சபையினால் சிகிச்சை நிலையங்களுக்கு படுக்கைகள் வழங்கல் நீர்வழங்கல் சபையினால் சிகிச்சை நிலையங்களுக்கு படுக்கைகள் வழங்கல் Reviewed by Editor on June 16, 2021 Rating: 5