(றிஸ்வான் சாலிஹூ)
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அப்துல்லா ஷாகித்திற்கு 143 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஐ.நா.பொதுச்சபையின் 76ஆவது தலைவராக தெரிவு பெற்றார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தை இவரே ஆரம்பித்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச்சபை தலைவராக அமைச்சர் அப்துல்லா ஷாகித் தெரிவு
Reviewed by Editor
on
June 08, 2021
Rating:
Reviewed by Editor
on
June 08, 2021
Rating:
