(றிஸ்வான் சாலிஹு)
கொவிட்-19 மூன்றாவது அலை காரணமாக சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று (21) திங்கட்கிழமை காலை முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசமும் முடக்க நிலையில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இன்று (21) காலை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி மற்றும் பிரதான வர்த்தக நிலையங்களுக்கு விஜயம் செய்து சுகாதார வழிமுறைகளை பேணி அக்கரைப்பற்று பிரதேசத்தை கொரோனா தொற்று அற்ற நகரமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வைத்திய அதிகாரி டாக்டர் காதர் சகல வர்த்தகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:


