அட்டாளைச்சேனை மன்சூர் சேர் அதிபராக நியமிக்கப்பட்டார்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய (தேசிய பாடசாலை) புதிய அதிபராக யூ.எல்.மன்சூர் இன்று (08) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரோவினால் காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக உடனடியாக செயற்படும் வண்ணம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த யூ.எல்.மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் தரம்-1யைச் சேர்ந்த இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) அதிபராகவும், அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பிரதி அதிபராகவும் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



அட்டாளைச்சேனை மன்சூர் சேர் அதிபராக நியமிக்கப்பட்டார்!!! அட்டாளைச்சேனை மன்சூர் சேர் அதிபராக நியமிக்கப்பட்டார்!!! Reviewed by Editor on June 08, 2021 Rating: 5