அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 சினோபாம் தடுப்பூசி ஏற்றல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நாளை சனிக்கிழமை (24) மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (25) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் 4மணி வரை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொவிட் -19 சினோபாம் தடுப்பூசி வழங்கப்படும் என்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து நாமும் நம் சமூகமும் பூரண சுகம் பெற சிரமம் பாராது குறித்த தடுப்பூசியை வைத்தியசாலைக்கு வருகை தந்து பெற்றுக் கொள்ளுமாறு வைத்திய அத்தியட்சகர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.




அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 சினோபாம் தடுப்பூசி ஏற்றல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 சினோபாம் தடுப்பூசி ஏற்றல் Reviewed by Editor on July 23, 2021 Rating: 5