அட்டாளைச்சேனை லக்கி அணி 5விக்கெட்களால் வெற்றி!!!

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டு கழகம் மற்றும் நியு ஸ்டார் விளையாட்டு கழக அணிகளுக்கிடையிலான நட்புரீதியான 25 ஓவர் கடின பந்து போட்டியில் 5 விக்கட்டுக்களினால் லக்கி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது .

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியு ஸ்டார் அணி 25 ஓவர் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 1 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் றிசாத் 28, ரஜாத் 15, அப்னான் 10 முறையே ஓட்டங்களை எடுத்தனர்.

பந்து வீச்சில் லக்கி அணியின் சார்பில் சஜாத்  3 விக்கட்டுக்களையும், ரிஸ்னி 2 விக்கட்டுக்களையும்  கைப்பற்றினர்.

வெற்றி பெறுவதற்கு 149 ஓட்டங்களைப் பெற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லக்கி அணி 22.3 பந்து வீச்சு ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ரிஸ்னி 38, சஜான் 28, அறூஸ் 22  முறையே ஓட்டங்களை எடுத்தனர்.

பந்து வீச்சில் நியுஸ்டார் அணியின் சார்பில் றிஸ்வி ஒரு விக்கட்டினையும் , அஸ்வர் ஒரு  விக்கட்டினையும் கைப்பற்றினர். இதன் மூலம் லக்கி அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



அட்டாளைச்சேனை லக்கி அணி 5விக்கெட்களால் வெற்றி!!! அட்டாளைச்சேனை லக்கி அணி 5விக்கெட்களால் வெற்றி!!! Reviewed by Editor on July 23, 2021 Rating: 5