இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேறினர்

கொரோனா தொற்று காரணமாக தற்போது இணையத்தளம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கை இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் (12) முதல் இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அண்மையில் பத்தரமுல்லை பொல்துவ சுற்றுவட்ட சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, தனி மைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேறினர்.

இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு எங்களின் தொழிற்சங்க உறுப்பினர்களை விடுவிக்கும் வரை தொடரும் என இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் முன்னெடுத்த தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் 23 ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

(தினக்குரல்)



இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேறினர் இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேறினர் Reviewed by Editor on July 12, 2021 Rating: 5