(றிஸ்வான் சாலிஹூ, பட உதவி - மாதவன்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதனடிப்படையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா அவர்களின் மேற்பார்வையில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பான முறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கு 60வயதுக்கு மேற்பட்ட இருபாலரும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குமே தடுப்பூசி வழங்கப்படுவோடு, வைத்தியசாலைக்கு தடுப்பூசி பெறுவதற்காக மக்கள் பெரும் ஆர்வத்துடனும், நீண்ட வரிசையிலும் நின்று தங்களுக்குரிய தடுப்பூசியை பெறுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்திய அத்தியட்சகர் ஆஸாத் தலைமையிலான குழுவினர் மிகவும் சிறப்பாக தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஒழுங்கு செய்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.
Reviewed by Editor
on
July 25, 2021
Rating:







