அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தல்!!

அரச நிறுவனங்களின் செலவுகளை எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு இயலுமான அளவு கட்டுப்படுத்துமாறும் , அரச நிறுவனங்களுக்கு சேவையாளர்களை புதிதாக இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச அனைத்து அரச நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அரச நிறுவனங்களின் மேலதிக செலவுகளை எதிர்வரும் 6 மாத காலத்திற்கு இயலுமான அளவு குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு,கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரச வருமானம் பாரிய அளவு குறைவடைந்துள்ள காரணத்தினால் இத்தீர்மானம் நிதியமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் நிதியமைச்சர் அரச நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே நிதியமைச்சர் அரச செலவினம் தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.




அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தல்!! அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தல்!! Reviewed by Editor on July 25, 2021 Rating: 5